விவாகரத்துக்கு பின் சிக்கலில் தவிக்கும் ஐஸ்வர்யா! எல்லாத்துக்கும் சூப்பர் ஸ்டார் தான் காரணம்

Aishwarya Rajinikanth
By Parthiban.A Aug 03, 2022 02:30 PM GMT
Report

நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருடங்களுக்கு பின் அவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர் கெரியரில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

மேலும் அவர் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களையும் அதிகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினியின் மகளாக இருப்பது கடினம் என பேசி இருக்கிறார்.

"வெளியில் இருந்து வருபவர்களை விட நட்சத்திர குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஏனெனில் மக்கள் எப்போதும் அவர்கள் மீது ஒரு பார்வை வைத்திருப்பார்கள்.

அவர்கள் சினிமாவில் நுழைந்த உடன் எல்லாமே சிறப்பாக செய்து சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்" என தெரிவித்து இருக்கிறார்.

விவாகரத்துக்கு பின் சிக்கலில் தவிக்கும் ஐஸ்வர்யா! எல்லாத்துக்கும் சூப்பர் ஸ்டார் தான் காரணம் | Aishwarya Rajinikanth On Difficulties Of Star Kid