ஆசைப்பட்டது தனுஷ்.. எல்லாம் நடப்பது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கா.. பிரிந்ததால் வந்த விணை..
தனுஷுக்கு மிகப்பெரிய ஆசை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து பாலிவுட், ஹாலிவுட் படங்கள் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். 2004ல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இரு மகன்கள் இருக்கும் நிலையில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரியவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதற்கு என்ன காரணம் என்றும் இருவரை சேர்க்க வேண்டும் என்றும் பலர் சமாதானப்படுத்த போராடினர்.
இதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த தனுஷுக்கு மிகப்பெரிய ஆசை ஒன்றிருந்தது. எப்படியாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று தான். ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்து ரஜினிகாந்தின் கோபத்துக்குள்ளாகினார் தனுஷ்.
ஐஸ்வர்யாவுக்கு இந்த ஆசை
ஆனால் தற்போது அப்பாவை வைத்து படம் இயக்கவேண்டும் என்ற கனவில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு இந்த ஆசை நிறைவேறியிருக்கிறதாம்.
அதில் ஒரு குறையிருக்கிறதாம். அதாவது ஐஸ்வர்யா இயக்கவுள்ள படத்தில் ரஜினிகாந்த் கவுரவத்தோற்றத்தில் நடிக்கவுள்ளராம். தனுஷுன் இந்த ஆசை இருவரும் சேர்ந்தால் மட்டுமே நடைபெற வாய்ப்புள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.