விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதை ஏன் பயன்படுத்துகிறார்? இதுதான் உண்மை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட காதல் திருமணத்திற்கு பிறகு இரு மகன்களுடன் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். இப்படியிருக்கையில் திடீரென ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் விவாகரத்து பெற்று பிரியவுள்ளோம் என்ற செய்தியை அறிக்கை மூலம் அறிவித்தனர்.
இச்செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த நிலையில் சூப்பர் ஸ்டார் உட்பட பல சமாதானம் செய்து சேர்த்து வைக்கவும் முயற்சித்துள்ளனர். இனிமேல் செட்டாகாது என்று இருவரும் முடிவெடுத்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்து துவங்கினர்.
விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக மாறிய ஐஸ்வர்யா தினமும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சமுகவலைத்தள பக்கங்களில் உடற்பயிற்சி, யோகா, சைக்கிளிங் போன்ற புகைப்படங்கள் விளம்பர வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கையில் அல்ட்ரா ஹியூமன் எச்க்யூ என்ற கருவியினை உடலில் செலுத்தி அதன் அளவினை பார்த்து வருகிறார். இதனை ஐஸ்வர்யா ஏன் பயன்படுத்துகிறார், உடலுக்கு என்ன பிரச்சனை என்று பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
சில கூறுகையில், டயப்ட்டீஸ் இருப்பவர்கள் தங்கள் உடலில் இருக்கும் க்ளூக்கோஸ் அளவினை கண்கானித்துக்கொள்ள இந்த கருவியை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் இதற்கு பயன்படுத்துகிறாரா? இல்லை சைக்கிளிங், உடற்பயிற்சி போன்ற செயலில் ஈடுபட இதனை பயன்படுத்துகிறாரா? என்று உறுதியாகவில்லை.