7 வருஷ தியாகத்துக்கு என் இரு மகன்கள் தான் காரணம்! உண்மையை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக இருந்து நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா. கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக இருவரும் அறிக்கை மூலம் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.
இச்செய்தி தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்ததோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. அப்படி இருவரையும் எப்படியாவது சேர்த்துவிட பல முயற்சிகள் நடந்தும் ஏமாற்றத்தில் முடிந்தது.
தற்போது தனுஷ் அவரின் வருங்கால படங்களில் பிஸியாகவும் ஐஸ்வர்யா இயக்கத்தில் அதிக ஈடுபாட்டுடனும் செயல் பட்டு வருகிறார். சமீபத்தில் பயணி என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டார். அதன்பின் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து பாலிவுட் படம் எடுக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் 7 ஆண்டுகளாக வெளியில் வராமல் இருக்க என்ன காரணம் என்று கூறியுள்ளார். வை ராஜா வை படத்திற்கு பிறகு என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்ததால் அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தேன்.
தற்போது இருவரும் பெரிய பிள்ளைகளாக வளர்ந்து விட்டதால் இயக்கத்தில் 7 வருடங்கள் கழித்து கையில் எடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.