இந்த நடிகைதான் வேண்டுமா? சூர்யா படத்தில் வெற்றிமாறன் பட நடிகையை கைக்காட்டும் பாலா!
பெரிய பட்ஜெட் படமில்லாமலும் வசூலில் பெரிய அளவில் கொடுக்கவில்லை என்றாலும் வித்தியாச வித்தியாசமான படங்களை அதிலும் விருதுக்கு இந்த படம் தான் என்று கூறும் அளவிற்கு இயக்கி வந்தவர் இயக்குநர் பாலா. வெற்றி, வசூல் என எதிலும் கலாகட்ட முடியாத பாலாவிற்கு இந்த கார்ணம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாலா படங்கள் என்றாலே பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கும்.
அப்படி பிதாமகன், நந்தா படங்களுக்கு பிறகு சூர்யா, விக்ரம் மாஸ் நடிகர்களாக இருந்தது அவரை ஒதுக்கிவிட்டனர். இதையடுத்து, சூர்யா பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும் அவரது படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். அந்த வகையில் விரைவில் பாலா மற்றும் சூர்யா இணையும் புதிய படம் ஒன்று தொடங்க உள்ளது. இந்தப்படத்தில் நாயகியாக வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சும்மா சொல்லக்கூடாது.
எந்த அளவுக்கு இறங்கி நடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார்.
அந்த வகையில் பாலா கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் பொது காம்பினேஷன் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் அதர்வா முரளி பாலா படத்தில் மீண்டும் இணையவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.