எது பண்ணாலும் தனுஷ் புராணமா இருக்கு! ஐஸ்வர்யாவை விடாமல் துறத்தும் ரசிகர்கள்..

dhanush rajinikanth maaran aiswarya musafir
By Edward Mar 07, 2022 03:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்ப சினிமா வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் மனது ஒற்று இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

இதுதொடர்பாக என்ன பிரச்சனை சரிசெய்யலாம் என்று ரஜினி மற்றும் குடும்பத்தினர் உட்பட அட்வைஸ் செய்து சேர்த்து வைக்க முற்பட்டனர். ஆனால் அதை ஒரு பொருட்டாக கருதாமல் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளை ஹைதராபாத்தில் பார்க்கும் கொண்டு வந்தனர்.

தனுஷ் மாறன் உள்ளிட்ட படத்தின் பிஸிய கால்ஷீட்டில் இருந்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யாவும் காதல் ஆல்பமான musafir பாடலை வரும் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இணையத்தில் எந்த வீடியோ பதிவினை செய்தாலும் தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்தும் தனுஷுடன் சேர்ந்து வாழுங்கள் என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதை பற்றி எதுவும் கூறாமல் 8ஆம் தேதியில் வெளியாகும் பாடலின் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.