என் மகனுக்கு இதைத்தான் கற்றுக்கொடுக்கிறேன்! தனுஷை குத்திக்காட்டிய ஐஸ்வர்யா

divorce dhanush aiswarya womensday
By Edward Mar 11, 2022 09:40 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து பிரியவுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

இச்செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டு பிரிவதற்கு என்ன காரணத்தை தேடி வருகிறார்கள். இருவரையும் சமாதானம் செய்தும் விடாபிடியாக இருந்து வருகிறார்கள். இதன்பின் இருவரும் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்து வருகிறார்கள்.

தனுஷ் கமிட்டாகிய படத்தின் படப்பிடிப்பிலும் ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடல் வேலையாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த மாதம் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதியாகி குணமடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது உடல்நிலை சரியானப்பின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா. இரு தினங்களுக்கு முன் உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடி பெண்களை பெருமைப்படுத்தினர்.

அதற்காக மருத்துவமனையில் செவிலியர்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சில கருத்துக்களையும் கூறியுள்ளார். பெண்களை மதிக்க என் மகன்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பெண்களையும் மதியுங்கள் என தெரிவித்தார். இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்கள் தனுஷை குத்துக்காட்டி தான் இப்படியான கருத்தினை கூறுகிறீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.