விவாகரத்துக்கு பின் இதை தூக்கி எறிய மனவரவில்லை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட புகைப்படம்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Sep 05, 2022 12:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை 2004ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா 3 படத்தினை தன் கணவரை வைத்து இயக்கி வெற்றியையும் கொடுத்தார்.

அதன்பின் இரு மகன்களை பெற்றெடுத்து சில படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இரவு சமயத்தில் தனுஷைவிட்டு விலகுவதாக கூறி அறிக்கையும் வெளியிட்டார்.

இது திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் உட்பல பல கூறியும் கேட்காமல் தன் வேலைகளை பார்க்க துவங்கிவிட்டார். தனுஷை பிரிந்த பின் ஆல்பம் பாடல் என இயக்கத்தினை ஆரம்பித்தும் ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளிக் வீடியோ புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பல கதைகளை சமீபகாலமாக எழுதி இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் ஒரு பதிவில்’ பேனாவில் எழுதி பின் அதை தட்டச்சுசில் பதிந்து சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாக இருந்தாலும், பின் அதை திரும்பி பார்க்கும் போது ஒரு பேப்பரை கூட தூக்கி போடமுடியவில்லை என்று கூறியுள்ளார்.