சங்கர் மகளால் ஏமாந்து போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி! நம்பவைத்து துரோகம் செய்த யுவன்..

Karthi Yuvan Shankar Raja Super Singer Aditi Shankar Viruman
By Jai Aug 09, 2022 04:10 AM GMT
Report

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான படம் விருமன். இயக்குனர் சங்கர் மகளான அதிதி சங்கர் நடிப்பின் மேல் ஆர்வத்தில் விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

மருத்துவ துறையில் இருந்து வந்து இப்படத்தில் கிராமத்து கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் யுவன் இசையில் ஒரு பாடலை அவருடன் சேர்ந்து பாடியும் இருக்கிறார் அதிதி சங்கர்.

மதுரை வீரன் என்று ஆரம்பிக்கும் இப்பாடலை சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஆடியோ லான்ச்சில் கூட அதிதி பாடி காட்டியிருக்கிறார். இந்நிலையில் இப்பாடலை முதலில் யுவன் சங்கராஜா சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியை வைத்து பாட வைத்திருக்கிறார்.

பாடல் முழுமையாக முடிந்தபின் அதிதியை பாட வைத்து ராஜலட்சுமி பாடியதை யுவன் நீக்கி இருக்கிறாராம். இதனால் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளதாக யுவன் மீது ராஜலட்சுமி சங்கடத்தில் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.