கோடிக்கணக்கில் தலைவிரித்தாடும் நடிகர்களின் சம்பள பிரச்சனை.. ரஜினி, விஜயகாந்திடம் கத்துக்கோங்க
தமிழ் சினிமாவிலும் சரி இந்திய சினிமாவிலும் சரி படத்தின் பட்ஜெட்டை விட நடிகர், நடிகைகளின் சம்பளம் தான் அதிகமாக காணப்படுகிறது. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படத்தில் நடிகர் நடிகைகளின் சம்பளமே 100 கோடி அளவில் இருக்கிறது. இதற்கு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பல கூக்குரல் போட்டுத்தான் வருகிறார்கள்.
ஹீரோக்களின் சம்பளத்தையும் சேர்த்து தான் தயாரிப்பாளர்கள் வட்டி கட்டி வருகிறார்கள். படம் தோல்வியடைந்தாலும் தயாரிப்பாளர் நடுத்தெருவுக்கு தான் தள்ளப்படுகிறார். இப்படியிருக்கும் நிலையில் 80களில் ரஜிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதற்கு அடிபணிந்து தான் சம்பளத்தை பெருவார்கள்.
அவர்களே முடிவெடுக்க மாட்டார்கள். வசூல் அதிகமானாலும் தயாரிப்பாளர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதைத்தான் பெற்று வருகிறார்கள். ஆனால் அப்படி இந்த காலத்தில் இருப்பதில்லை. பிளாக்பஸ்டர் கொடுத்தால் உடனே சம்பளத்தை ஏற்றுவதை தான் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த காலத்து நடிகர் நடிகைகள்.
இப்படியொரு தருணத்தில் நடிகர் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் விவேகம் படம் தோல்வியடைந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் படுநஷ்டத்தை சந்தித்ததால், அதையறிந்த அஜித் அதன்பின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம் படத்தினை நடித்து கொடுத்தார். அப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் இரு மடங்கு பெற்றது.