மீண்டும் மீண்டுமா.. சென்டிமெண்ட்டை விடாத அஜித்

Ajith Kumar Manju Warrier
By Kathick May 12, 2022 01:25 PM GMT
Report

அஜித் தற்போது மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இப்படத்தில் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு 'வீரா' என தலைப்பு வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே வெளிவந்த அஜித்தின் பல திரைப்படங்களின் தலைப்பு வி-யில் துவங்கியுள்ளது. அந்த படங்களின் வெற்றி சென்டிமெண்ட் காரணமாக இப்படத்தின் தலைப்பும் வி-யில் ஆரம்பம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.