ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் 40 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடியாச்சே

Ajith Kumar Nayanthara Pooja Hegde
By Kathick May 29, 2025 11:30 AM GMT
Report

அஜித் 

அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் 40 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடியாச்சே | Ajith 64 Movie Heroine Update

ஆகையால் ஏகே 64 திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றன.

ஹீரோயின்ஸ்

இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இருவரும் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

[5TBATF ]

மேலும் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கப்போவதாக அப்டேட் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் அஜித்துடன் பூஜா ஹெக்டே இணைவது இதுவே முதல் முறையாகும். ஆனால், கதாநாயகிகள் குறித்து வெளிவந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.