முதுகில் குத்திய தயாரிப்பாளர்! ஏமாற்றியும் மன்னித்து விட்ட தல அஜித்

Ajithkumar Yennaiarindhaal Amratnam
By Edward Oct 28, 2021 06:15 PM GMT
Report

தமிழ் திரையில் இரு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் படமாக வைத்திருப்பவர் நடிகர் அஜித். வலிமை என்ற ஒற்றை சொல்லின் படம் வருகிற போங்களுக்கு விருந்தாக்கவுள்ளது. அப்படி இருக்கையில் அஜித் பற்றிய சுவாரஷ்ய நிகழ்வுகள் பகிரப்பட்டு வரும்.

அந்தவகையில், சினிமாவில் அஜித்தை இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு வந்த சில முக்கிய தயாரிப்பாளர்களுக்கு அஜித் எப்போதுமே நன்றியாக இருப்பார். தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம். அஜித்தை வைத்து என்னை அறிந்தால் வேதாளம் போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

இந்த இரண்டு படங்களில் அஜித்திடம் தன்மையாக பழகியவர் எப்படியாவது அஜித்தை தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட வேலைகளை பின்னாலிருந்து பார்த்துள்ளார். வேதாளம் படத்தின் போது இருவருக்கும் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. பேசி சரிசெய்து விட வேண்டிய பிரச்சனையை தேவையில்லாமல் அஜித்தை பற்றி தவறாக பேசி அஜித்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாராம் ரத்தினம்.

அதன் காரணமாகவே இப்போது அவருக்கு படம் செய்வதில்லை என்றொரு குறிக்கோளில் இருக்கிறார் அஜித். அப்படி இருந்தாலும் அவர் பார்க்கும் போது மரியாதையோடு நடந்து கொள்வாரம் அஜித்.