பில்லா படத்தில் நடிக்க அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
Ajith Kumar
Actors
Tamil Actors
By Kathick
விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணி என்றாலே அந்த படம் சூப்பர்ஹிட்தான். இவர்களுடைய கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த படம் பில்லா.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பில்லா படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் எல். சுரேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.