மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது, அதிர்ச்சி தகவல்
அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் மூன்று நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து, குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நடிப்பில் மட்டுமின்றி தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் தீவிரமாக தற்போது இறங்கி இருக்கிறார் அஜித்.
அடுத்த பல மாதங்களுக்கு அவர் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். சமீபத்தில், அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள பயற்சி செய்து கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்தில் சிக்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் நல்ல வேலையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. இந்நிலையில், அஜித் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியதாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
என்ன ஆனது
இது குறித்து பேசுகையில்" என் ரசிகர்கள் மட்டுமின்றி நான் எப்படி உள்ளேன், என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி.
இன்றைய பயிற்சியின்போது கூட எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.