விடாமுயற்சி-க்கு பிரேக்!! மகள் பிறந்தநாளுக்கு வெளிநாட்டு பெண்ணுடன் நடனமாடிய நடிகர் அஜித் குமார்..
Ajith Kumar
Dubai
Anoushka Ajith
Tamil Actors
VidaaMuyarchi
By Jai
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். துணிவு படத்திற்கு பின் இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார் நடிகர் அஜித். சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் துபாய் சென்று அங்கு சுற்றி வரும் அஜித், ரசிகர்களை சந்தித்து புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், அஜித்தின் மகள் அனோஷ்காவின் 16வது பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். தற்போது இரவு பார்ட்டியின் போது வெளிநாட்டு பெண்ணுடன் அஜித், நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.