பிக்பாஸ் 7 பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!! எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 94 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் நிக்ஷன் மற்றும் ரவீனா வெளியேற்றப்பட்டுள்ளனர். தினேஷ், விஷ்ணு, மணி, மாயா, பூர்ணிமா, விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து பிக்பாஸ், பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம், குறையலாம் என்று கூறியிருந்தார். பணப்பெட்டியை யார் எடுப்பார் என்று போட்டியாளர்கள் ஆளுக்கொர் பெயரை அடுக்கி வந்தனர்.
இன்றைய பிரமோ வீடியோவில் 9 லட்சம் மதிப்பில் பணப்பெட்டி காட்டப்பட்டது. ஆனால் நேற்று இரவு 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி வந்ததாகவும் பலருக்கும் இன்னும் விலை உயரட்டும் என்று காத்திருந்து வந்த நிலையில் விசித்ரா அந்த சூப்பரான சம்பவத்தை செய்திருக்கிறார்.
நேற்று இரவு 10.45 மணிக்கு 13 லட்சம் மதிப்பிலான பணப்பெட்டியை விசித்ரா எடுத்து வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிக்பாஸ் சுரேஷ் தாத்தாவிடம் கேள்வி கேட்க, மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை வீணடித்துவிட்டார் என்றும் டைட்டில் நமக்கு கிடையாது என்று இப்படியொரு முடிவை எடுத்திருப்பது நல்ல விசயம் தான் என்று கூறியிருக்கிறார்.
அவர் பின்னால் இருந்த பிரதீப், அதில் எனக்கு உடன் பாடு இல்லை என்று கூறும் ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார். ஆனால் விசித்ரா தான் பணப்பெட்டியை எடுத்தாரா? என்று இன்றைய இரவு லைவ் எபிசோட்டில் தான் தெரியவரும்.
You May Like This Video