நீங்க கஷ்டத்தில் தான் போவீங்க!! தேவயானி தயாரித்த படத்துக்கு சாபம்விட்ட அஜித்..
ராஜகுமாரன்
இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜகுமாரன், பார்த்திபன், அஜித், தேவயானி ஆகீயோரின் கூட்டணியில் உருவான படம் தான் நீ வருவாய் என. தற்போது சினிமாவில் இருந்து விலகி தொழில்களில் ஈடுபட்டு வரும் ராஜகுமாரன், சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அதில், ‘நீ வருவாய் என’ படம் முடிந்தவுடன், அஜித் ஒரு வருடம் காத்திருக்க சொன்னார். ஆனால் கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருந்ததால் நாங்கள் படம் தொடங்க திட்டமிட்டோம்.
இதையறிந்த அஜித், நீங்கள் இந்த படம் பண்ணக்கூடாது, பண்ணால் நான் ஷூட்டிங்கை நிறுத்திவிடுவேன், எனக்கு ஒரு படம் பண்ணிட்டு இதை பண்ணுங்க என்று சொன்னார். அவர் விளையாட்டுக்கு சொல்கிறார் என்று நினைத்து நாங்கள் ஷூட்டிங்கை தொடங்கினோம்.

சாபம்விட்ட அஜித்
40 கிமீ கடந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் அஜித், அங்கே வந்து அரைநாள் மதியம் வரை அமர்ந்திருந்தார். அதன்பின் அவ்வளவு சொன்னப்பிறகும் நீங்கள் படம் ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க, நீங்க கஷ்டத்தில் தான் போவீங்க, தலையெழுத்தை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றார்.
அதன்பின் படம் ரிலீஸாகி அவர் சொன்னது மாதிரியே கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அதன்பின் அவரை சந்தித்தபோது, இப்போ என்னால் படம் பண்ண முடியாது, நானே அதைவிட சிரமத்தில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அப்படி அஜித் சொன்ன படம் தான் முரளி, தேவயானி, அப்பாஸ் நடிப்பில் வெளியான காதலுடன் படம்.

ராஜகுமாரன் இயக்கத்தில் 2003ல் வெளியான இப்படத்தை தேவயானி தயாரிக்க்க பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.