அஜித்தா வேண்டவே வேண்டாம்!! AK-வுக்கு கண்டீசன் போட்டு ஏமாற்றிய பிரபல இயக்குனர்..

Ajith Kumar Gossip Today N. Lingusamy Tamil Actors
By Edward Apr 15, 2024 06:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் லிங்குசாமி, சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார். ஆனந்தம், ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த லிங்குசாமி, ஜீ, பீமா, அஞ்சான், சண்டைக்கோழி 2, தி வாரியர் போன்ற பிளாப் படங்களை கொடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை இழந்தார். பல படங்களை தயாரித்து நஷ்டங்களை சந்தித்தும் வந்த லிங்குசாமி, சமீபத்தில் சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அஜித்தா வேண்டவே வேண்டாம்!! AK-வுக்கு கண்டீசன் போட்டு ஏமாற்றிய பிரபல இயக்குனர்.. | Ajith Dont Intrest Act Jii Lingusamy Open Talk

வெற்றிப் படத்திற்கு தோல்வி படத்திற்கும் இடையே என்ன வித்தியாசம் என்று எனக்கு 100 சதவீதம் தெரியும். ஆனந்தம், ரன் படத்தில் எப்படி நான் உண்மையாக இருந்தேனோ, அந்த தரம் படத்தில் தெரிந்தது. அது இல்லாததற்கு காரணம், நான் மட்டும் காரணமில்லை, அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர்களும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். மேலும், ஜீ பண்ணும் போது, மாபெரும் ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் சாருக்கு அந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. என் படத்தில் மட்டுமில்லை, படத்திலேயே நடிக்க விருப்பம் இல்லை. கார் ரேஸ் தான் அவருக்கு முக்கியமாக இருந்தது.

அஜித்தா வேண்டவே வேண்டாம்!! AK-வுக்கு கண்டீசன் போட்டு ஏமாற்றிய பிரபல இயக்குனர்.. | Ajith Dont Intrest Act Jii Lingusamy Open Talk

அந்த தயாரிப்பாளரிடம் காசு இல்லை, படம் தாமதனாச்சு, அதை சொல்லி நான் தப்பிக்க நான் ரெடியாக இல்லை. இதுமாதியானால் ஆரம்பத்தில் இருந்த உணர்வு எனக்கு எப்போதும் இருக்கணும். அஜித் சாரிடம் 2 கண்டீசன் போட்டேன். தாடி ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்றும் உடல் எடையை குறைக்க வேண்டும், ரியல் லொக்கேஷன் இருக்கனும் என்று சொன்னேன். அதற்கு அஜித் சார், என்னை வைத்து ரியல் லொக்கேஷன் வெச்சு ஷூட் பண்ணவே முடியாதுன்னு சொன்னார்.

அவர் சொன்னது நிஜம் தான். அப்படியொரு திமிர் பிடித்தவர், கோயம்புத்தூரில் சண்டை காட்சியின் போது கையில் கீரல் ஏற்பட்டு ரத்தம் வந்தது. நான் சொன்னேன்ல ரியல் லொக்கேஷன் வேண்டாம்னு, அஜித் சொன்னார். எனக்கென்னவோ அஜித் வேண்டாம்னு நினைத்தேன், ஆனால் உதவி இயக்குனர்கள் அஜித்தை வேண்டாம்னு சொல்லாதீங்க என்று கூறினார்கள்.

அரசியல் ஆசையால் ஒட்டுமொத்த மார்க்கெட்டுக்கே ஆப்பு வைத்து கொண்ட விஜய்!! கோட்-க்கு வந்த சோதனை..

அரசியல் ஆசையால் ஒட்டுமொத்த மார்க்கெட்டுக்கே ஆப்பு வைத்து கொண்ட விஜய்!! கோட்-க்கு வந்த சோதனை..

எனக்கு அஜித் சாரை பொறுத்துவதிலேயே எனக்கு பிடிக்கவில்லை. படம் நடக்கும் போது அப்படத்தின் ஃபிலிம் சுனாமி, நிலநடுக்கத்தில் அடித்து போகனும் என்று கடவுளிடம் வேண்டினே. அப்பவே படம் ஓடாது என்று எனக்கு தெரியும். அப்போது அந்தந்த நேரத்தில் நடக்கும் என்று நேரம் மீது நம்பிக்கை கொண்டு பேசினார் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.