அனிருத் - காவ்யா மாறன் திருமணம்!! யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?
அனிருத் - காவ்யா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத் ரவிச்சந்திரன் தற்போது தர்மன் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருக்கையில், அனிருத்தின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது உலா வருவதுண்டு.

35 வயதை எட்டும் அனிருத்துக்கு கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனுடன் ரகசிய காதல் இருப்பதாகவும் விரைவில் திருமணம் என்ற செய்திகளும் பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தாலும் இந்த தகவல் இன்னும் இணையத்தில் பேசுபொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி அளித்த பேட்டியொன்றில் அனிருத் திருமணம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
குட்டி பத்மினி
அதில், அனிருத் ரொம்ப சாதுவான பையன், விரைவில் மிகப்பெரிய திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இதன்மூலம் அவருக்கு வாழ்த்து சொல்லியாக வேண்டும். நானும் கேள்விப்பட்டதை வைத்துதான் உறுதியாக கூறுகிறேன், அவர்கள் சூப்பர் ஜோடி.
அந்த பொண்ணும் சாதாரணமானவர் கிடையாது. ஒரு டீமையே ஹேண்டீல் செய்யும் சாமர்த்தியம் அப்பெண்ணுக்கு இருக்கிறது. அவருடைய அப்பாவின் தொழில் ஜீனை இவருக்குள் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நிறைய பேரை சந்தித்திருக்கிறோம்.

அந்த பிசினஸ் மைண்ட் இப்பெண்ணுக்கும் இருக்கிறது. அனிருத்தும், அந்த பெண்ணும் சேர்ந்து மியூசிக்கள் பிசினஸ் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஓய் ஜி மகேந்திரன்
அவரைப்போல், அனிருத் - காவ்யாவின் திருமணத்தை ஓய் ஜி மகேந்திரனும் உறுதி செய்திருப்பதால் அனைவரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.