அர்த்தமைந்தா ராஜா!! ரஜினிகாந்த் போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்களை கடுபேற்றும் அஜித் ரசிகர்கள்
Ajith Kumar
Rajinikanth
Vijay
Jailer
Leo
By Edward
தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி - கமல் என்ற போட்டி அந்த காலத்தில் இருந்ததோ, அதேபோல் விஜய் - அஜித் என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய போராக அமைந்து வருகிறது.
ஆனால் தற்போது அது மாறி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற வாதம் தான் இணையத்திலும் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ரஜினி - விஜய் ரசிகர்களிடையே சோசியல் மீடியாக்களில் கடுமையான சண்டை சென்று கொண்டிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் ஒரு செயலை செய்துள்ளனர்.
கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்ப்பில் “சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவும் முடியாது! ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது!! அர்த்தமைந்தா ராஜா” என்ற வசனத்துடன் மேனர் ஒன்றினை மிகப்பெரிய நீளத்தில் வைத்துள்ளனர்.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த செயலை வைத்து அஜித் ரசிகர்களை வம்பிழுத்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
