வலிமை அப்டேட் எங்கே! ஓடாதபடத்திற்கு செலவு செய்யும் போனிகபூரை விளாசும் ரசிகர்கள்
முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் விசுவாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் அதன் அப்டேட் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் எங்கு எந்த பிரபலங்களை பார்த்தாலும் வலிமை அப்டேட் எங்கே என்று கேள்வி கேட்டு டிரெண்ட்டிங் செய்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தில் டைட்டில் மட்டுமே அறிவித்த தயாரிப்பாளர் போனி கபூரை திட்டியும் வருகிறார்கள்.
அதற்கு காரணம், மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஓடாத ஒன்று என்ற படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி உள்ளார் போனி கபூர்.
இதனால், கடுப்பான தல ரசிகர்கள் ஓடாத படத்தின் மீது பணத்தை செலவு செய்வதை விட்டுவிட்டு வலிமை அப்டேட் கொடுங்க என்று கலாய்த்தும் திட்டித்தீர்த்தும் இணையத்தில் கூறி வருகிறார்கள்.