கண்ணா ரெண்டு லட்டு தின்ன அசையா..! அஜித்துக்கு ஜோடியாகும் இரு நடிகைகள்
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் AK 61. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இப்படத்தையும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாருக்கிறார். இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இது மட்டும் உறுதியானால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் பிறகு, அஜித் - தபு ஒன்றிணைவார்கள்.
இந்நிலையில், தபுவை தொடர்ந்து AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை அதிதி ராவை கமிட் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன்முலம், நடிகர் அஜித் இரண்டு கதாநாயகிகளுடன் ஜோடி போட்டு நடிக்கவுள்ளார்.