அஜித்துக்கும் எச் வினோத் என்ன பிரச்சனை.. வேடிக்கை பார்க்கும் போனி கபூர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், வலிமை படத்திற்கு பிறகு எச் வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் துணிவு படத்தின் மூலம் தொடர்ந்துள்ளது.

யுவன் பிரச்சனை
அஜித்தின் 61 வது படமாக துணிவு என்ற டைட்டிலில் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் அஜித் மீண்டும் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேல் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தில் அஜித் பைக் ரைட் என்று ஊர் சுற்றி வந்தது படக்குழுவினருக்கு சற்று வெறுப்பை கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜாவுடன் எச் வினோத் சில மனக்கசப்பு காரணமாக அஜித் யுவன் கூட்டணி முறிந்தது.
அஜித் - வினோத் பிரச்சனை
இந்நிலையில், அஜித்திற்கு போனி கபூருக்கும் சில பிரச்சனை இருப்பதாகவும் கூறிய நிலையில், அஜித் விருப்பம் இல்லாமல் தான் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அஜித், எச் வினோத்துடன் மனக்கசப்பில் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். இப்படியே சென்றால் துணிவு படம் அடுத்த ஆண்டு மே வரை செல்ல வாய்ப்பும் இருக்கிறதாம்.