மேடையில் மீனாவின் அம்மாவால் அவமானப்பட்ட அஜித்!! பெரிய மனுஷன் என்ற உண்மையை நிரூபித்த ஏகே

Ajith Kumar Meena Gossip Today
By Edward Jan 17, 2023 09:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. ஆரம்பகால அஜித் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் அவமானங்களை சந்தித்து இப்படியொரு இடத்தினை பெற்றுள்ளார்.

மேடையில் மீனாவின் அம்மாவால் அவமானப்பட்ட அஜித்!! பெரிய மனுஷன் என்ற உண்மையை நிரூபித்த ஏகே | Ajith Humiliated By Meenas Mother Insult In Stage

தன்னைத்தானே செதுக்கி யார் துணையும் இல்லாமல் பல கோடி ரசிகர்கள் தன் பக்கம் வைத்துள்ளார். அஜித் தனக்கு உதவு வேண்டும் என்று வருபவர்களுக்கு உதவக்கூடியவராக திகழ்வார். அப்படி அந்த சூழலில் இருக்கும் போது நடிகை மீனாவின் அம்மா மேடையில் அஜித்தை அவமானப்படுத்தி விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த பூங்காற்றே என்ற படத்தில் அஜித்துடன் மீனா நடித்துள்ளார். அப்போது அஜித்தை விட பெரிய மார்க்கெட்டை கொண்டவர் மீனா என்பது தெரிந்த ஒன்று. அப்படியொரு சூழலில் அஜித்திற்கு மீனா ஒரு விருதுவிழாவில் அஜித்திற்கு விருது வழங்கியிருக்கிறார்.

மேடையில் மீனாவின் அம்மாவால் அவமானப்பட்ட அஜித்!! பெரிய மனுஷன் என்ற உண்மையை நிரூபித்த ஏகே | Ajith Humiliated By Meenas Mother Insult In Stage

அப்போது அஜித்துடன் நடனமாட கேட்டிருந்தனர். அதை கேட்டதும் மேடையின் கீழ் அமர்ந்திருந்த மீனாவின் அம்மா உடனே அழைத்துச்சென்றுவிட்டாராம். ரஜினி, கமல் என நடித்து வரும் என் மகள் இவருடன் நடனமாடுவதா என்று அவமானப்படுத்தும் வண்ணம் மீனாவை கூட்டிச்சென்றிருக்கிறார்.

அதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாத அஜித், வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் மீனாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். தன்னை அவமானப்படுத்தினாலும் அதை மனதில் வைக்காமல் இப்படியொரு பெரிய மனசை காட்டியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.