படமே இவ்ளோ தான் வசூலாம், ஆனால் சம்பளம் அஜித்துக்கு இவ்ளோ கோடி வேனுமாம்
Ajith Kumar
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இத்தனை உச்சத்தில் இருந்தாலும் அஜித்தால் இன்றும் விஜய்யின் மார்க்கெட்டை எட்டி பிடிக்க முடியவில்லை.
விஜய் 500 கோடி வசூலை தாண்டி விட்டார், ஆனால், அஜித்தோ இன்றும் 200 கோடி வசூலில் தான் இருக்கிறார்.
இந்நிலையில் அஜித் குட் பேட் அக்லீ என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளிவந்தது.
இந்த படத்திற்காக அஜித்துக்கு ரூ 163 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதை வைத்து பார்க்கையில் அஜித் படத்தின் வசூலை தாண்டி அவருடைய சம்பளம் உள்ளதாக ரசிகர்களே கிண்டலடித்து வருகின்றனர்.