அஜித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ முழு விவரம்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 283 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அஜித்திற்கு சமீபத்தில் தான் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. சினிமா, கார் ரேஸ் என இரண்டிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் குமாரின் 54வது பிறந்தநாள் இன்று. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இவர் கடைசியாக நடித்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.