அறுவை சிகிச்சை செய்த ஷாலினி!! ஓடோடி வந்த அஜித்..

Ajith Kumar Shalini Gossip Today VidaaMuyarchi
By Edward Jul 03, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வருகிறது. நேற்று விடாமுயற்சி படத்தின் முக்கிய படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்.

இந்நிலையில் அஜித் மனைவி நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

அறுவை சிகிச்சை செய்த ஷாலினி!! ஓடோடி வந்த அஜித்.. | Ajith Kumar Returns Met His Wife Shalini Hospital

ஆனால் அந்த சமயத்தில் அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் மனைவியுடன் கூடவே இருக்கமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அப்போது சூட்டிங்கை கேன்சல் செய்யாமல் படம் தான் முக்கியம் என்று நடித்து முடித்துக்கொடுத்துள்ளார்.

தன்னுடை போயன் முடிந்துவிட்டது என்பதால் அந்த கேப்பில் தன் மனைவியை பார்க்க நேற்று சென்னைக்கு திரும்பி இருக்குறார் அஜித். மருத்துவமனையில் மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எடுத்த புகைப்படமும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களால் பாராட்டையும் பெற்று வருகிறது.

Gallery