குட் பேட் அக்லி படத்துக்கு அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ajith Kumar G V Prakash Kumar Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Mar 01, 2025 11:30 AM GMT
Report

குட் பேட் அக்லி

விடாமுயற்சி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

குட் பேட் அக்லி படத்துக்கு அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா? | Ajith Kumar Salary For Good Bad Ugly Adhik Movie

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகியது.

அஜித் சம்பளம்

பல கெட்டப்பில் நடித்துள்ள அஜித்தை பலர் கொண்டாடி வரும் நிலையில், அஜித் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ரூ. 270 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ. 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.