போரடிக்கும் சினிமா!! விரக்தியில் AK 62வுக்கு பின் அஜித் எடுக்கப்போகும் முடிவு..
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதன் பிறகு அஜித்தின் 62 விக்னேஷ் சிவன் இயக்க போவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியது நாம் அறிந்ததே.

அஜித் ஓய்வா?
இதன் பின் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித் 62 படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகிவருகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை.
இதற்கு காரணம் படத்தின் தலைப்பும், இயக்குனர் குறித்த தகவலும் ஒரே நாளில் அறிவிக்கலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த படம் பிரமாண்டமாக இருக்கவும் பிளான் செய்து வருகிறார்களாம். AK 62 படம் வெளியான பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கலாம் என்று அஜித் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
