GBU பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விடாமுயற்சி!! கடும்கோபத்தில் அஜித் ரசிகர்கள்..

Ajith Kumar Magizh Thirumeni VidaaMuyarchi Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Sep 10, 2024 06:15 PM GMT
Edward

Edward

Report

நடிகர் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினி காசண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ளது விடாமுயற்சி படம். பெரும் எதிர்ப்பார்ப்புகள் இப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த நிலையில் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ட்டீட்டாக அக்டோபர் 31ல் வெளியாகவிருந்தது.

GBU பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விடாமுயற்சி!! கடும்கோபத்தில் அஜித் ரசிகர்கள்.. | Ajith Kumars Vidaamuyarchi Pushed To 2025 Gbu May

அதேபோல் அஜித் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி பொங்கல் என்று வெளியாகவும் இருந்தது. அடுத்தடுத்த அஜித் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை உற்சாகமடைய வைக்கும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஜெயம் ரவியின் பிரதர் படமும், கவினின் பிளடி பெக்கர் படமும் வெளியாகவுள்ளன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புஷ்பா 2 படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனால் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

GBU பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விடாமுயற்சி!! கடும்கோபத்தில் அஜித் ரசிகர்கள்.. | Ajith Kumars Vidaamuyarchi Pushed To 2025 Gbu May

அப்படி என்றால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் சம்மர் ரிலீஸுக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை.

அஜித்தின் துணிவு படம் வெளியாகி 1 வருடத்திற்கு மேல் ஆகியும் விடாமுயற்சி படமாவது இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இதனால் விடாமுயற்சி படம் பொங்கல் அன்று கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்திற்கு போட்டியாக கலமிரங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.