குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் ஒரு சட்டை.. அடேங்கப்பா இத்தனை லட்சமா?
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித் குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் 10 - ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த டீசர், கோலிவுட் திரையுலகில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என சாதனை படைத்துள்ளது.
இந்த டீசரில் அஜித் பல கெட்டப்பில் தோன்றி இருந்தார். அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கையில் டாட்டூவுடன் கலர்புல்லான சட்டை அணிந்திருந்தார். அந்த கெட்டப்பில் அஜித்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இத்தனை லட்சமா?
இந்நிலையில், அஜித் அப்போது அணிந்திருந்த சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சட்டை மட்டுமே ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது.
Adangokka..makka.....🥵😬 #GoodBadUgly #AjithKumar pic.twitter.com/TZJywhrmcM
— 🦂ɳ𝖎𝖛𝖆𝖘𝖍 🆎+🏅ᴬʲⁱᵗʰᴷᵘᵐᵃʳ (@nivash_legend8) March 2, 2025