டேட் கூட உங்களுக்கு தெரியாதா அஜித்? ரசிகர் எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே60 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு படத்தின் வேலைகளை மும்முரமாக செய்து வருகிறார். தற்போது படத்தின் மற்றொரு கதாபாத்திரத்திற்காக அஜித் உடலை மாற்ற இருப்பதால் கொஞ்சம் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார் அஜித்.
அதனால் லண்டன் சென்று பைக்கில் ஊர்சுற்றி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தன் ரசிகரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியும் கடிதம் எழுதியும் உள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் கையெழுத்திட்ட்ட அந்த கடிதத்தில் மேலே தேதியை பதிவிட்ட அஜித் 10-10-22 என்று எழுதியுள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் 29-06 என்று தானே வரும் ஏன் டேட் கூட அஜித்திற்கு தெரியாதா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், இதனை அஜித் ரசிகர்கள் அந்த தேதியில் பிறந்த நாள் கொண்டாடினால் அந்த தேதியை தானே பதிவிட முடியும் என்று ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.
Ajith sir wishing a fan birthday.
— Ajith (@ajithFC) June 29, 2022
| Video: lavan | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/lgn6slhxp3