சுக்குநூறாக உடையவிருக்கும் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. விஜய்யை தட்டித்தூக்க உதயை வைத்து அஜித் போட்ட பிளான்

Ajith Kumar Udhayanidhi Stalin Vijay Varisu Thunivu
By Edward Nov 15, 2022 08:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் நடிகர் விஜய், அஜித். அவர்களது இரு படங்களாக வாரிசு, துணிவு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

அதற்காக இரு படக்குழுவும் தியேட்டர்களை பிரித்துக்கொள்ள கடும் போட்டியை போட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரை நிலைத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யை எப்படியாவது சுக்கு நூறாக அந்த இடத்தை உடைக்க அஜித் பல ரூட்டுக்களை போட்டுள்ளார்.

அதற்கு முதல் படியாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலினை தன் வலையில் சிக்கவைத்தது தான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் துணிவு தயாரிப்பாளருடன் பேசப்பட்டதாக உதயநிதி கூறியிருந்தார்.

அந்தவகையில் ரெட் ஜெயண்ட் சுமார் 1100 தியேட்டர்களை துணிவு படத்திற்காக புக்கிங் செய்துள்ளதாம். அதற்காக டிக்கெட் புக்கிங்கும் தமிழகம் முழுவதும் ஆரம்பித்துள்ளதாகவும் பிரபல பிஆர்ஓ ரமேஷ் பாலா டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்திற்காக எப்போதும் நடக்கவுள்ள பிரமோஷனையே இருக்கட்டும் என்று துணிவு படத்தின் தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.