அஜித்தால் சினிமாவை விட்டு ஓடிய தயாரிப்பாளர்! சிம்பு கொடுத்த ஆதரவு..

ajith simbu citizen sschakravarthy Nic Arts Chakravarthy vettaimannan
By Edward Mar 05, 2022 11:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் ஆரம்பத்தில் பல தோல்விகளை கண்டு இருக்கிறார். அவருடன் பயணித்த பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அப்படி அஜித்தின் 9 படங்களை தயாரித்து அஜித்தை தூக்கி உயரத்தில் நிருத்தியவர் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி.

நடிகர் அஜித்தை வைத்து வாளி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார். அதன்பின் அஜித்தின் ஜி, வரலாறு, ஆஞ்சநேயா போன்ற படங்களும் நடிகர் சிம்புவின் காளை, வாலு போன்ற படத்தை தயாரித்த எஸ் எஸ் சக்ரவர்த்தி அதன்பின் 7 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாரித்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் எடுக்கலாம் என்று பிளான் செய்திருந்தாராம் சக்ரவர்த்தி. அதற்கு பட்ஜெட் சரியாக அமையாததாலும் பிள்ளைகளின் திருமணம் போன்ற குடும்ப விஷயங்களால் தான் அப்படம் நிறுத்தப்பட்டதாம்.

மேலும், வாலு படத்தினை முடித்து விட்டு வேட்டை மன்னன் படத்தை ஆரம்பிக்கலாம் என்று சிம்பு கூறினார். அதன்பின் வாலு படம் வெளியாகி வசூல் 2 கோடி மட்டுமே கிடைத்தது. நிறுத்தி வைக்கப்பட்ட வேட்டை மன்னன் படம் சிம்புவை வைத்து மீண்டும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.