இனி சினிமாவே வேண்டாம்! அப்படியொரு முடிவை அஜித் எடுத்தார்! பிரபல இயக்குநர்..

race kushboo sundarc unnaithdi thalajith
By Edward Oct 19, 2021 03:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல கோடி ரசிகர்களால் தல என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தினை முடித்து விட்டு மற்ற பணிகளில் கலமிரங்கியுள்ளார். அஜித் பற்றி பல பிரபலங்கள் எந்த பேட்டிகளிலும் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படி இயக்குநர் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அஜித்தை பற்றிய ரகசியத்தை கூறியுள்ளார்.

சுந்தர் சி மற்றும் தல அஜித் கூட்டணியில் 1999ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற படம் வெளியானது. சுமாரான வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் போதே தல அஜித் சினிமாவை விட்டு விரைவில் விலக போவதாக சுந்தரிடம் தெரிவித்தாராம். கார் மற்றும் பைக் ரேஸ் என்பது நடிகர் அஜித்திற்கு ஒரு அடையாளமாக இருந்து வருகிறது. அப்படி பல முறை ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார் தல.

அந்த வகையில் நிறைய கார் ரேஸ் பைக் பந்தயங்களில் பங்கு பெற்று நிறைய முறை அவருக்கு ஆபரேஷன் செய்தது நினைவிருக்கலாம். உன்னை தேடி படத்தின் போது அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் நடித்துக் கொடுத்தாராம்.

அந்நிலையில் தான் அந்த படம் முடிந்த பிறகு இனி சினிமாவில் நடிப்பது கஷ்டம் தான் என தெரிவித்திருந்தாராம். மேலும் உடல் அதற்கு ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை எனவும் வருத்தப்பட்டு சினிமா விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அதைவிட பெரியளவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்தாலும் படங்களில் இன்னும் நடித்து கொண்டு தான் இருக்கிறார் தல அஜித்.