இயக்குனருடன் ஏற்பட்ட மோதல்!! அஜித்துக்கு எதிராக கட்டம் கட்டி பத்தே நாளில் தூக்கி எறிந்த சுகாசினி, மணிரத்னம்..
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் அவர் செட்டாவார் இவர் செட்டாகாமாட்டார் என்று படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தெரியவரும். அப்படி நடிகர் அஜித்குமார் 10 நாட்கள் படத்தில் நடித்தும் அதன்பின் தயாரிப்பாளர் கொடுத்த டார்ச்சரால் படத்தில் இருந்து தூக்கிய சம்பவம் நடந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்குவதை தாண்டி மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
முதலில் தன் படத்தினை தயாரித்து வந்த மணிரத்னம் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்காக மற்ற படத்தினையும் தயாரிக்க ஆரம்பித்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் தயாரிக்கும் படங்களின் கதை, கதாபாத்திரம், டப்பிங் உள்ளிட்ட பல விதங்களில் மணிரத்னம் மனைவி சுகாசினியின் பங்கு இருந்து வருகிறது.
அப்படி இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சூர்யா, விஜய் நடிப்பில் 1997ல் வெளியான நெருக்கு நேர் படத்தினை மணிரத்னம் தயாரித்திருந்தார். ஆனால் முதல் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் தான் நடிக்க இருந்தது. அதுவும் கமிட்டாகி 10 நாட்கள் ஷூட்டிங்கில் அஜித் முடித்திருந்தார்.
ஆனால் இடையில் அஜித்திற்கு இயக்குனர் வசந்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இது மணிரத்னம், சுகாஷினியின் காதிற்கு சென்றது. உடனே மணிரத்னம், சுகாஷினி இயக்குனர் வசந்திடம் அஜித்தை படத்தில் இருந்து தூக்கிவிடலாம் என்று பிளான் போட்டு இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் என்பதால் அதற்கு வசந்தும் ஓகே சொல்லியிருக்கிறார். அதன்பின் அஜித் ரோலுக்கு பிரசாந்திடமும் பிரபுதேவாவிடம் கேட்க தனிப்பட்ட காரணத்தினால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.
அதன்பின் சூர்யாவிடன் கேட்க முதல் சிவக்குமார் வேண்டாம் என்று கூறி அதன்பின் மணிரத்னம் கூறியதால் ஓகே சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். விஜய்யும் அறிமுக நடிகர் சூர்யா என்று பார்க்காமல் நடித்து கொடுத்திருக்கிறார்.