அப்பவே பயில்வானை வெளுத்து வாங்கிய நடிகர் அஜித்! யார் கிட்ட வெச்சுகிட்ட..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் வெளியானது. எதிர்மறை விமர்சனங்களுடன் வெளியான இப்படத்திற்கு பிறகு எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தின் பூஜை ஆரம்பமானது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ள அஜித்தின் புதிய லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அஜித் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார் அஜித்.
சினிமாக்காரர்களை வற்புறுத்தி அரசியல் நிகழ்ச்சிக்கு கூப்பிடாதீர்கள். எங்களை நடிக்கவிடுங்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாமே என்று கருணாநிதியிடம் கோரிக்கை விட்டார்.
இதற்கு அரங்கில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டினார். இதன்பின் அஜித் பிரஸ்மீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ரசிகர்களிடம் முன்ன மாதிரி உங்க ரசிகர்களுடனான தொடர்பு குறைந்து விட்டதே அதபத்தி என்ன சொல்றீங்க அஜித், ஏனென்றால் எங்க வீட்டிலும் இதை கேட்கிறார்கள் என கேட்டிருந்தார்.
உங்களுக்கே என்ன பத்தி தெரியும் என் கூட நடித்திருக்கீங்க, எனக்கு தனிமை பிடிக்கும். படத்திற்கு பிரமோஷன் முக்கியம் தான் ஆனால் எனக்கும் ஒரு தனிபட்ட வாழ்க்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
என் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால் நேரத்தை வீணாக்காதீர்கள். நான் கொடுத்த தோல்வி வேறொருவராக இருந்தால் காணாமல் போயிருப்பார்கள். ரசிகர்கள் தான் என்னை இந்த இடத்தில் நிருத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் அஜித்.
#Ajith Replied To #Bayilwanranganathan pic.twitter.com/xcpvMug6qk
— chettyrajubhai (@chettyrajubhai) April 14, 2022