விஜய்யை முந்த முயற்சி செய்யும் அஜித்.. அதுவும் அந்த விஷயத்தில்
Ajith Kumar
Vijay
By Karthick Raja
அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்திற்கு பின் ஏகே 63 உருவாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்களாம்.
இப்படத்தில் நடிப்பதற்காக அஜித்துக்கு ரூ. 165 கோடி சம்பளமாம். விடாமுயற்சி படத்திற்காக ரூ. 105 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கிய அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

லியோ படத்திற்காக ரூ. 125 கோடி வரை விஜய் தன்னுடைய தளபதி 68 படத்திற்காக ரூ. 75 கோடி உயர்த்தி ரூ. 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. விஜய் தனது சம்பளத்தை ஹிமாலய உயரத்திற்கு உயர்த்தியபின் தற்போது அஜித்தும் அதே வழியை பின்பற்றுகிறார்.
விரைவில் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.