நாடு நல்லா இருக்கணுமுன்னு எல்லாரும் அரசியலுக்கு வந்தா? அஜித் கூறியது இதுதான்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அவர் விதவிதமாக போஸ் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
பெரும்பாலும் அஜித், ஊடகங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சமுக கருத்துக்களை கூறுவது போன்ற விசயங்களை ஒதுக்கி வைத்தாலும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சந்தானம் பேட்டி எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு சில கருத்துக்களை கூறியிருந்தார்.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்த மும்முரம் காட்டிய விசயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
அந்தவகையில், அஜித் கொடுத்த பேட்டியில் அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார். அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்பது தவறு. சரியான தலைவர்கள் வழிநடத்த தேவை. நாடு நல்லா இருக்கனும் என்பதற்காக எல்லாரும் அரசியலில் வந்து நுழைந்தால் சரியாக இருக்காது.
என்னை பொறுத்தவரையில், அவரவர் கடமையை சரியாக செய்தால் நாடு நல்லா இருக்கும். ஓவ்வொரு முறையும் அரசியல்வாதிகளை, ஐஏஎஸ் அதிகாரிகளை குறை சொல்கிறோம். பொதுமக்களும் அப்படி இருக்கிறார்கள்.
நிறைய இடங்களில் உரிமை போராட்டம் நடத்துக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமில்லை உலகளவில் நடக்கிறது. கடமை பற்றி யாரும் பேசுறது இல்லை. நாம் சரியாக இருக்கிறோமா? சில விசயங்கள் பேசும் போது தவறாக கணிக்கப்படுகிறது, புரியப்படுகிறது என்று அஜித் கூறிய அந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு நல்லாருக்கணுமுன்னு " எல்லாரும் அரசியலுக்கு வந்தா?"
— Jaya TV (@JayaTvOfficial) February 4, 2024
@iamsanthanam #ActorAjithKumar #AjithKumarLatestSpeech #AjithPoliticalSpeech #JayaTv pic.twitter.com/m00VChXc8r