விஜய்யின் தவெக மாநாடு!! திராவிட மாடலை ஆதரிக்கிறாரா அஜித்!! அடுத்த பஞ்சாயத்து ரெடி..
நடிகர் விஜய், தன்னுடைய 69வது படத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அதன்பின் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
பல லட்சக்கணக்கான மக்கள் சூழ மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதிலும் விஜய் திராவிட மாடல் என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியதும் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
அஜித் கார் பந்தயம்
இப்படி இருக்கும் நிலையில் துபாயில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் தன் அணியுடன் பங்கேற்கவுள்ளார். அதில் அஜித்தின் ஹெல்மெட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரை இடம்பெற்றிருக்கிறது.
இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தார்.
அவரது டிவிட்டை பார்த்த பலரும் திராவிட மாடலை எதிர்த்த விஜய்க்கு எதிராக அஜித்தை உதயநிதி நிறுத்துகிறாரோ என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது. விஜய்யின் திராவிட மாடல் எதிர்ப்பு பேச்சுக்கு உதயநிதி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.