கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல.. நடிகர் அஜித் அதிரடி கருத்து
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்தனர். இது மிகப்பெரிய துயரத்தை தந்தது.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்தார். அந்த செய்திகள் கூட இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து நடிகர் அஜித் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார். "கூட்ட நெரிசல் சம்பவத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன. அதற்கு அந்த நபர் (விஜய்) பொறுப்பல்ல. நாம் எல்லாருமே பொறுப்பு. நம் சமுதாயம் இப்படி மாறிவிட்டது. இது முடிவுக்கு வேண்டும்".
"கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கு அப்படி நடப்பதில்லை. தியேட்டர், சினிமா நட்சத்திரம் வெளியே வரும்போது மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. சினிமா துறையை இது தவறாக காட்டுகிறது"