நல்ல படத்துக்கு பப்ளிசிட்டி தேவையில்லைன்னு சொன்னவரா இது.. விதவித போஸ் கொடுத்த அஜித்தை விளாசும் நெட்டிசன்கள்..

Ajith Kumar Thunivu
By Edward Nov 10, 2022 11:25 AM GMT
Report

அல்டிமேட் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்திற்கு பிறகு எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். பில்லா படத்திற்கு பிறகு ரசிகர் மன்றத்தை கலைத்தும் ஊடகங்கள் பத்திரிக்கை உள்ளிட்ட பலவற்றில் இருந்து ஒதுக்கியும் வந்துள்ளார்.

அஜித் பைக் ரைட்

அதேபோல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அஜித் பைக் ரைட் துப்பாக்க்கி சுடுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியிருக்கும் நிலையில் சில மாதங்களாக ரசிகர்களை சந்தித்தும் அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் வருகிறார். அதேபோல் தான் எங்கு சென்றாலும் அங்கு வீடியோ எடுப்பவர்களுக்கு போஸ் கொடுத்தும் டிரெண்ட்டாகி வருகிறார்.

பப்ளிசிட்டி

ஆனால் தற்போது விஜய்யின் எதாவது ஒரு அப்டேட் வந்தாலே போது அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படங்கலை பகிர்வது ட்ரெண்ட்டாகிவிடும். மேலும் துணிவு படத்திற்காக ஆஃப்லை பேட்டியையும் அஜித் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவியது. இப்படி போட்டிப்போட்டு துணிவு படத்திற்காக அஜித் பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறாரா என்று கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery