விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் போஸ்.. வைரலாகும் நடிகை திரிஷாவின் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்து டாப் இடத்தினை பிடித்தார். மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்தார். இடையில் லீக்ஸ் வீடியோ, காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் என பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இரு மடங்காக உயர்த்தினார்.
இதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் Thug Life போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் Vishwambhara என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதமாவதால் திரிஷா கொஞ்சம் கோபத்தில் இருந்து என்ன செய்வது என்று முழித்து வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் திரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விஜய்யுடன் தான் திரிஷா தனியாக சென்ற புகைப்படம் வெளியாகி வந்தது.
தற்போது திரிஷா, அஜித்துடன் பல ஆண்டுகள் கழித்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் சமீபகாலமாக எங்கு சென்றாலும் அவரே போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/5a9e3ed9-5eed-4e43-9088-1d88af4acd25/24-65c2034304ca4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6a92208f-67c8-441f-9d61-680194c751f3/24-65c2034383029.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0bbb1f9c-dd7a-48fc-97d1-ddc26676399d/24-65c2034416e47.webp)