வளர்த்துவிட்ட இயக்குனரிடம் கோபப்பட்ட நடிகர் அஜித்!! இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்கள். அஜித் இந்த இடத்தினை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிலர். அதில் மிகமுக்கிய இடத்தினை பிடித்தவர் தான் இயக்குனர் சரண்.

ஆரம்பகாலக்கட்ட அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று மார்க்கெட்டை உருவாக்கிய படமாக அமைந்தது காதல் மன்னன். காதலை மையப்படுத்தி வெளியான இப்படத்தை தொடர்ந்து அமர்களம் படம் மேலும் ஒரு வலுவை அஜித்திற்கு கொடுக்க காரணம் அப்படத்தின் இயக்குனர் சரண் தான். இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட10 ஆண்டுகளுக்கு பின் சரண் இயக்கத்தில் அசல் படத்தில் நடித்தார் அஜித். ஆனால் படம் ஓரளவிற்கு கூட வெற்றியை பிடிக்கவில்லை.
இந்நிலையில் இயக்குனர் சரண் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வட்டாரம் படத்தில் அஜித் நடிக்க வைக்காமல் இருந்த காரணத்தையும் அதனால் அஜித் கோபப்பட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார். நான் நம்பர் 1 ஆக வேண்டும் என்று அஜித் எப்போது கூறி வலியுறுத்துவார். அப்போதே அவர் அந்த பெரிய இடத்திற்கு வரவேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருந்தது என்னை கவர்ந்தது.

அப்படி வட்டாரம் கதையை உருவாக்கும் போது அஜித்திற்கு என்று ஒரு இடம் கிடைத்துவிட்டது. அந்த படத்தில் நடிக்கக்கூடிய இடத்தில் இருந்து உயரத்திற்கு சென்றுவிட்டார். அதனால் அவரை தேர்வு செய்யவில்லை.
இந்த கதையை அவரிடம் சொல்லவில்லை. அதனால் தான் என்னை ஏன் வட்டாரம் படத்தில் நடிக்க வைக்கவில்லை, நான் பண்ணி இருப்பேன் என்ற ஆதங்கம் இருந்தது. நீங்கள் பெரிய இடத்திற்கு சென்றதால் உங்களை நான் யோசிக்கவில்லை என்று அஜித்திடம் கூறியதாக இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.