விரைவில் நேரில் சந்திக்கிறார்களா அஜித் - விஜய்? இதுதான் காரணம்!

russia ajith vijay valimai beast
By Edward Aug 04, 2021 04:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து உச்ச நடிகர்களா இருந்து தங்களுக்கென்ற ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர்கள் நடிகை விஜய், அஜித். இவர்களின் ரசிகர்களுக்கிடையே இணையத்தில் எக்கச்சக்க சண்டைகள் கிளம்பும் அனைத்து படங்களுக்கும்.

ஆனால் அஜித் விஜய் இருவரும் இன்று வரை நண்பர்களாக தான் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருவார்கள். இந்நிலையில் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரண்மாக ரஷ்யாவில் இரு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு இருப்பதால் விஜய் - அஜித் சந்தித்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.