அஜித் - விஜய் இணைந்து நடித்த இந்த படத்தில் தளபதியின் சம்பளம் என்ன? பல ஆண்டு உண்மை..

vijay ajithkumar rajavinparvaiyile soundarapandian sachanrasekar
By Edward Aug 04, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு இயங்கி வருபவர் விஜய், அஜித். இவர்கள் இணைந்து 1989ல் நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. இப்படத்திற்கு பிறகு அஜித் விஜய்யின் மார்க்கெட் சற்று உயர்ந்ததால் இருவரும் இணைந்து படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்காக அஜித்,விஜய் வாங்கிய சம்பளம் பற்றியும் எப்படி பேச்சுவார்த்தை நடந்ததை பற்றியும் ராஜாவின் பார்வையிலே படத்தின் தயாரிப்பாளர் செளந்தரபாண்டியன் கூறியுள்ளார். விஜய்யின் ரசிகன் படத்தின் 100 நாட்களுக்கு பிறகு தேவா படத்தின் ஷூட்டிங்கின் போது எஸ். ஏ சந்திரசேகரை சந்தித்து பேசினோம்.

அப்போது கதை கூறி விஜய்யை நடிக்க கேட்டுக்கொண்டேன். கதை விஜய்க்கு பிடித்துவிட்டது. உடனே தம்பியின் நண்பன் என்னுடைய நல்ல பிரண்ட் அஜித்திடமும் இந்த கதையை கூறினேன். உடனே அதற்கு ஒப்புக்கொண்டு நடிக்க வைத்தேன். அப்படத்தில் அஜித் சம்பளம் ஏதும் வாங்காமலும் விஜய் குறைந்த சம்பளத்தை பெற்றுகொண்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு தற்போது இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனையால் நண்டிக்க வைக்கமுடிவில்லை. இருவரும் வேறு ஒரு கதை அம்சத்தில் இருப்பதாகவும் இப்போது நடிக்க வைப்பது முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.