விஜய்யின் பிடிவாதத்துக்கு காரணமே அஜித்தான்! துணிவு - வாரிசு இடையே ஏற்படும் பொங்கல் போர்..

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Edward Nov 29, 2022 09:09 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக இருக்கும் கமல், ரஜினிக்கு அடுத்து அந்த இடத்தினை பிடித்துள்ளவர்கள் அஜித், விஜய். இவர்களின் படங்கள் வந்தாலே போதும் தியேட்டர் முழுக்க விழாக்கோலம் போல கொண்டாடித்தள்ளுவார்கள் அவர்களின் ரசிகர்கள்.

அப்படி பல ஆண்டுகள் கழித்து விஜய், அஜித்தின், வாரிசு - துணிவு படங்கள் மோதவுள்ளன. இந்த விசயம் ஆரம்பித்த நாளில் இருந்து விஜய் படமான வாரிசு-க்கு பல பிரச்சனைகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத அஜித் துணிவு படத்தினை பொங்கல் அன்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியே தீரவேண்டும் என்ற பிடிவாரத்தில் இருந்து வருகிறார். இதற்கு விஜய்யும் ஒரு படிமேல் சென்று வாரிசு படத்தையும் ஜனவரி 12ல் வெளியிட வேண்டும் என்று பல வேலைகளை செய்து நிறைவேற்றியிருக்கிறார்.

இதுகுறித்து பல சினிமா விமர்சகர்கள் இருவரையும் சாடி பேசி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியதாவது, விஜய் ஏன் பிடிவாதமாக இருக்கார் என்றால் அஜித் தான் காரணம்.

அஜித்தின் துணிவு படத்திற்கான சிஜி வேலைகள் முடியவில்லை என்று படக்குழு கூறியதற்கு என்ன செய்வீர்களோ இல்லையோ படம் சொன்ன தேதியில் வெளியாகவேண்டும் என்று அஜித் கூறியிருக்கிறார். இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் தான் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.