பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய மாஸ்க் படம்.. நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்
Kavin
Box office
Mask (2025)
By Kathick
கவின் நடிப்பில் வெளிவந்த லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
ஆனால், அதன்பின் வெளிவந்த ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் மாஸ்க் படம் கவினுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மூன்று நாட்களில் மாஸ்க் திரைப்படம் உலகளவில் ரூ. 6 கோடி வசூல் செய்த நிலையில், நான்கு நாட்கள் முடிவில் ரூ. 6.1 கோடி மட்டுமே மொத்த வசூல் வந்துள்ளது.
இதன்மூலம் நான்காவது நாளில் மாஸ்க் திரைப்படம் மிகப்பெரிய சரிவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்துள்ளது.