மனைவி ஷாலினியால் ஏற்பட்ட உறவு! அகோரி படத்தால் இயக்குநர் பாலாவுடன் சகவாசத்தை நிறுத்திய தல அஜித்?

ajith director bala valimai
By Jon Mar 24, 2021 02:33 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் பல இயக்குநர்களுடன் பணியாற்றி வந்தவர். அதேசமயம் தனக்கு செட்டாகவில்லை என்றால் உடனே நிறுத்திக்கொள்வார். அப்படியாக நான் கடவுள் படத்தில் ஏற்ப்பட்ட சில சலசலப்பால் நடிகர் அஜித் இயக்குநர் பாலாவுடன் இன்னும் நட்புறவை நிறுத்தி வருகிறார்.

அதற்கு காரணம் சில பேட்டிகளில் பாலா மறைமுகமாக கூறினாலும் தற்போது இதுதான் காரணம் என்று அப்படத்தில் பேசப்பட்டு விலகிய தயாரிப்பாளர் கூறியுள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினியின் நண்பராக இருந்தவர் பிஎல் தேனப்பன் என்கிற தயாரிப்பாளர். மனைவி ஷாலினியால் நல்ல அறிமுகமாகி நட்பாகி குடும்பத்தில் இருவராக பழகியவர் தேனப்பன். நட்பு காரணமாக அஜித்தை வைத்து ஒரு படத்தினை தயாரிக்க நினைத்து பாலாவை அனுகியுள்ளார்.

படம் பேசப்பட்டு நான் கடவுள் எனற பெயரு வைத்து பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியானது. பாலா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யார் பேச்சையும் கேட்க மாட்டாராம். அவருக்கு என்ன தோணுதோ அதை செய்வாராம். இதன் காரணமாக இந்த தயாரிப்பாளருக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தருகிறேன் என காசிக்குச் சென்றவர் 21வது நாள் தான் முதல் காட்சியை படமாக்கினாராம். மேலும் நினைத்த நேரத்தில் அஜித்தை அழைத்து ஷூட் செய்தாராம்.

அதுமட்டுமில்லாமல் தல அஜித்திற்கு படப்பிடிப்பில் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை எனவும் அரசல் புரசலாக பேசியது தயாரிப்பாளர் காதில் விழுந்துள்ளது. என்னால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கஷ்டப்படக் கூடாது என அஜீத் சொல்ல, என் இஷ்டத்திற்கு தான் படம் எடுப்பேன் என பாலா சொல்ல வந்தது பஞ்சாயத்து.

இதன் காரணமாகவே அஜீத்திற்கும் பாலாவுக்கும் பிரச்சனை முற்றி அஜீத் அந்தப் படத்தில் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாலா அஜித் போனால் என்ன சிறிய பட்ஜெட் நடிகர் ஆர்யாவை வைத்திருந்தார். படம் ஓரளவிற்கு தான் ஓடியதாக பேசப்பட்டது. தற்போது வரை பாலாவை பார்த்து பேசியதை தவிர்த்தும் வருகிறார் நடிகர் அஜித். பாலாவும் அப்படியான மனநிலையில் இருந்து வருகிறார்.